KGF-2வில் பிரபல தமிழ் வில்லன் நடிகர்!!வைரலாகும் புகைப்படம்.

Famous Tamil Villain Actor in KGF-2 : இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஹிட்டடித்த கன்னட திரைப்படம் கேஜிஎப். திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தது.

ஆக்ஷன் படமான கே ஜி எஃப்ல்  கன்னட நடிகர் யாஷ் நடித்து இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த சஞ்சய்தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

எனவே அவருக்கு பதிலாக இந்த கதாபாத்திரத்தில் தமிழில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கும் நடிகர் நடிக்க உள்ளாராம். அது யார் என்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது.

இளைய தளபதி விஜய்க்கு கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு போன்ற பல படங்களில் வில்லனாக நடித்திருந்த பிரகாஷ் ராஜ் அவர்கள் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்துள்ளது.

கே ஜி எஃப் 2 வில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

prakasraj-KGF-2
prakasraj-KGF-2

Leave a Comment