சீரியலில் புகுந்து விளையாடிய முன்னணி நடிகைகள்.!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து பின்னர் சீரியலில் நுழைந்து அட்டகாசம் செய்யும் தொழிலைப் பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகை நளினி இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சீரியலில் தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை.  இவரது தோற்றம் தான் பெரியது ஆனால் இவரது முகம் குழந்தை போன்றது. காமெடியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. ஒரு காமெடி சீன் வருது என்றால் அந்த அளவிற்கு காமெடியாக நடித்து வருவார் அதேபோல் வில்லி கதாபாத்திரத்திலும் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரம்யா கிருஷ்ணன் இவர் சொந்தமாக சீரியல் எடுத்தார் இவர் சொந்த நிறுவனத்திலும் நடித்தார் மற்ற நிறுவனத்திலும் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன்  யாரிடமும் பேசவே மாட்டார். இருப்பினும் அந்த கௌரவத்தை காப்பாத்திக் கொள்வார் அதாவது தான் ஒரு முன்னாள் கதாநாயகி என்பதை நடவடிக்கையில் காட்டமாட்டார் அமைதியாக இருப்பார். இவருடைய கரார் குணம் சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது.

ramya krishnan

வடிவுக்கரசி இவர் ஒரு பச்சைத் தமிழச்சி வில்லி கதாபாத்திரத்தில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் தோல்வி அடைந்தவர்  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு சில புதுமுக நடிகைகளுக்கு உதவிகளும் செய்வார். வடிவுக்கரசிக்கு எந்தத் தோற்றம் கொடுத்தாலும் அவருக்கு சரியாக பொருந்தும் அந்த அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும்.

பிரியா ராமன் இவர் அலட்டிக்கொள்ளாத எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். இவர் ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தார் பின்னர் உடல் எடை கொஞ்சம் அதிகரித்தது. இதில் முக்கியமானது என்னவென்றால் அதிகமாக ஷெட்டில்  யாருடனும் பேசாமல் இருப்பார் யார் என்றால் அவர் பிரியா ராமன்தான். இவர் வில்லி கதாபாத்திரத்தில் அவ்வளவு அருமையாக நடிப்புத் திறமை உள்ளவர் என்று தான் கூற வேண்டும்.

priya raman

தேவி பிரியா ஆரம்பத்தில் காவல்துறை அதிகாரி, கதாநாயகி, பின்னர் வில்லி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சகல மாக நடிக்கக் கூடியவர் தேவி பிரியா. இவர் பல விபச்சார வழக்கில் கைதாகி இருந்தாலும் இதையெல்லாம் வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் எதிரியை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு நடிக்கக் கூடியவர் என்றால் அவர் விஜய் பிரியா தான்.

அம்பிகா இவர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகிய மூன்று கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை அம்பிகா. பல நட்சத்திரங்களுடன் நடித்த அம்பிகா சின்னத்திரைக்கு வரும் போது உடல் எடை அதிகரித்தது இருந்தாலும் எந்த ஒரு பந்தா, திமிரு, எதுவும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்தோடு வாழ்பவர் நடிகை அம்பிகா.

Leave a Comment

Exit mobile version