நடிகர் சிம்புவை ஷூட்டிங் பார்ட்டில் வந்து சந்தித்த பிரபல சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் புகைப்படம்.

simbu
simbu

நிஜத்தில் தான் சில அதிசயங்கள் நடக்கும் ஆனால் தமிழ் சினிமாவில் சில அதிசயங்கள் அவ்வபொழுதும் அரங்கேறுவது உண்டு அந்த வகையில் தமிழ் சினிமாவில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்த காதல் மன்னன் சிம்புவை திடீரென ஒரு கட்டத்தில் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து புதிய அவதாரம் எடுத்தார்.

அதை வெளிக்காட்டும் விதமாக சுசீந்திரன் உடன் உடனடியாக இணைந்து ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை கொடுத்தார் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து வெங்கட்பிரபு உடன் இணைந்து மாநாடு திரை படத்தில் கமிட்டானார் இந்த படம் தற்போது முடிவடைந்து சமீபத்தில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி வந்தது.

அவ்வபொழுது சிம்புவின் மாநாடு புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை சிம்பு சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இது எப்பொழுது நிகழ்த்தப்பட்டது என்பதுதான் ரசிகர்களின் கேள்வி குறியாக இருந்தது. எஸ்டிஆர் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு திடீரென மகேஷ்பாபு விசிட் அடித்தார் அதற்கு காரணம் ஒரே செட்டில் இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டதுதான்.

மகேஷ்பாபுவின் மகரிஷி திரைப்படம் அதே செட்டில் எடுக்கப்பட்டதால் சிம்புவும் மகேஷ்பாபும் சந்திக்க நேர்ந்தது அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டனர் மேலும் சில நேரம் கழித்து இருவரும் புகைப்படம் எடுத்தனர். அதை நீங்களே பாருங்கள்.

simbu
simbu