கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள்.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி அந்த திரைப்படங்களை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற வைத்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ்

இவர் தமிழில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி அதனை தொடர்ந்து கைதி,மாஸ்டர் என தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்ததால் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் மாநகரம் திரைப்படம் இவருக்கு நன்றாக நல்ல வரவேற்பு கொடுத்ததால் தான் இவர் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி இளைய தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் போன்ற பல திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கிய கைதியும்,மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் இவர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தது தான் மிகப்பெரிய திருப்பு முனையாக இவருக்கு அமைந்துவிட்டது.

மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தத் திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடதக்கது இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இணைந்துள்ளனர் இவர்கள் இணைந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் இவர்கள் ஏற்கனவே கே ஜி எஃப், கைதி, சண்டக்கோழி, கபாலி,மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களுக்கு இவர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.இதனை அடுத்து  ரசிகர்கள் பலரும் விக்ரம் திரைப்படம் எப்போது வெளியாகும் என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment