காலம் போன காலத்தில் கல்யாணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை..! இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படம்..!

0
chandra-2
chandra-2

தமிழ் திரை உலகில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த ஒரு நடிகை என்றால் அது சந்திரா லட்சுமணன் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை  பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் நடித்த சீரியல்கள் கோலங்கள், வசந்தம், மகள், துளசி, சொந்தம், பந்தம், பாசமலர் ஆகிய சீரியல்கள் ஆகும். மேலும் சீரியலில் மட்டும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டாமல் வெள்ளித்திரையிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி, அதிகாரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவ்வாறு தமிழ்மொழி மட்டுமின்றி மலையாளத்திலும் சுமார் 18 வருடங்களாக நடிகை சந்திரா 50க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்துள்ளாராம்.

நமது நடிகை தனக்கு முப்பத்தி எட்டு வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில் நடிகை சந்திராவிற்கு திருமணம் நடந்தது பலருக்கும் அதிர்ச்சியூட்டிய விஷயமாக கருதப்படுகிறது

chandra-1
chandra-1

சமீபத்தில் சந்திரா ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார் மேலும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக டோஷ் கிரிஸ்டி என்ற நடிகர் நடிக்க வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் நல்ல பழக்க வழக்கம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் பின்னர் அது காதலில் முடிவடைந்து விட்டது.

இவ்வாறு வெகுநாளாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்ட விஷயம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.