திருமணத்திற்கு தயாரான பிரபல சீரியல் நடிகை.! நிச்சயதார்த்தம் முடிந்தது..

மாடலாக தனது கேரியரை தொடங்கிய தற்பொழுது சின்னத்திரை நடிகைகளில் முன்னணி நடிகையாக தனது சிறந்த நடிப்பின் மூலம் அசத்தி வருபவர் நடிகை ஐஸ்வர்யா சாலிமத். இவர் மாடலாக பணியாற்ற ஆரம்பித்து பிறகு கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவரின் நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து தொடர்ந்து  சீரியல்கலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. இதன் மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விடாமல் தமிழ் சின்னத்திரைக்கும் என்றிக் கொடுத்தார்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் தொடரில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.தமிழில் இதுதான் முதல் சீரியலாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பு திறமையின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவ்வாறு இவரின் புகழ் ரசிகர்கள் மத்தியில் உயர்ந்து கொண்டே போனதால் கன்னடத்தில் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்தவகையில் சில திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரையிலும் கன்னட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் விரைவில் தமிழிலும் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ள இவர் விஜய் டிவியை தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான உயிரே என்ற என்ற சீரியலில் ஹீரோயினாக  நடித்து அசத்தி இருந்தார்.  இவ்வாறு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் மற்ற நடிகைகளைப் போல தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் வீடியோக்கள், கலந்துரையாடுவது என பிஸியாக இருந்து வருகிறார்.

serial actress
serial actress

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருக்கும் பிரபல கன்னட சீரியல் நடிகர் வினய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. அவ்வப்பொழுது இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment