அஜித்தை ரோல் மாடலாக வைத்து வாழும் பிரபல தயாரிப்பாளர்.! யார் அது தெரியுமா.?

0
ajith
ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித். தனது சினிமா கேரியரில் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர் அதற்கு முக்கிய காரணம் அவரது நடிப்பையும் தாண்டி அவர் செய்யும் செயல் அனைத்தும் சிறப்பாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் ரோல் மாடலாக வைத்து அவரை பார்த்து வருகின்றனர்.

அதனால் அவரை எப்பொழுதுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் கூட அஜித்தைப் பார்த்து மெய்சிலிர்த்து என்றனர். அப்படி ஒருவரை தான் இப்பொழுது நாம் பார்க்க இருக்கிறோம் அஜித்தின் தீவிர ரசிகரான வலம் வருபவர் ஆர்கே சுரேஷ். இவர் தயாரிப்பாளராகவும். நடிகராகவும் சினிமா உலகில் வலம் வருகிறார்.

ஆர் கே சுரேஷ் அண்மையில் பேட்டி ஒன்றில் அஜித்தை இவ்வளவு பெரிய அளவில் நீங்கள் பின்தொடர என்ன காரணம் என கேட்டுள்ளனர் நான் அஜீத்தின் தீவிர ரசிகன் அஜித் அவர்கள் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியான பண்புகளை வைத்திருப்பவர் எல்லா விதத்திலும் சரியாக நடந்து கொள்ளக் கூடியவர் குறிப்பாக ரசிகர்கள் மற்றும் தனது குடும்பத்தின் மீது அளப்பரிய அன்பு, சரியாக நடந்து கொள்ளுதலில் சரியாக இருக்கிறார்.

அவரது நடத்தை மற்றும் செயல் போன்ற அனைத்தையும் பார்த்து நான் மெய்சிலிர்த்து உள்ளேன். இவரைப் போன்று வேறு யாரும் இல்லை எனவே அவரை நான் ரோல் மாடலாக வைத்து தற்பொழுது நானும் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன்.

அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுக்கின்ற வேலையை சரியாக செய்ய கூடியவர் தனது சுற்றி இருப்பவர்களை பார்த்துக்கொள்வார் உதவி என்றால் செய்வார் அதே போலவே நானும் தற்போது அஜித்தை ரோல் மாடலாக வைத்து பயணித்துக் கொண்டிருக்கின்றேன் அவரைப் போலவே இருக்க ஆசைப்படுகிறேன் என கூறினார் ஏன் பில்லா பாண்டி படத்தில் கூட அஜித்தின் ரசிகராக வாழ்ந்து இருப்பார்.