தமிழ் சினிமாவிற்கு குறைந்த திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என் பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
கடைசியாக நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அதன் விளைவாக டாப் நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குனர்கள் லிஸ்டில் இவரும் இணைந்தார் தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து “விக்ரம்” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியவர்களை தட்டி தூக்கிய நிலையில் தற்போது அவர்களுக்கு ஜோடிகளையும் ஒவ்வொன்றாக செலக்ட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் சிவானி கமீட் செய்தது. அவரைத் தொடர்ந்து மைனா நந்தினி ஐயும் இழுத்துப் போட்டது. இப்படி ஒவ்வொரு நடிகைகளை கொக்கி போட்டு தூக்கி வந்த நிலையில் தற்போது எதிர்பாராதவிதமாக சின்னத்திரை தொலைகாட்சிகளில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வந்த விஜே மகேஸ்வரியையும் விக்ரம் திரைப்படத்தில் இணைத்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இதுகுறித்து அவர் பேசியது : கமல் சார் அலுவலத்தில் இருந்து எனக்கு போன் வந்தது விக்ரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டனர் என்னை யாரோ கலாய்க்கிறார்கள் என முதலில் நினைத்தேன் பின்னர்தான் நிஜமாகவே கமல் ஆபீஸில் இருந்து போன் வந்தது என்னை அந்த படத்தில் நடிக்க கூப்பிட்டால் என்ன கதாபாத்திரம் என்று கூட எனக்கு தெரியாது.

நேரடியாக சூட்டிங்கிற்கு வர சொன்னார்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற பின்புதான் என் கதாபாத்திரம் என்ன என்பது எனக்கு தெரிந்தது எனக்கு விஜய் சேதுபதி சாருடன் தான் அதிக காட்சிகள் என்பதால் பல சீன்கள் என்பதால் அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் லோகேஷ் கனகராஜ் சிறந்த மனிதர் என தெரிவித்தார்.