“சர்தார்” படத்தின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம் – எவ்வளவு கோடி கொடுத்து வாங்கியுள்ளது தெரியுமா..

சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை கொடுத்தாலும் அவ்வப்போது தோல்விகளையும் சந்தித்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக சுல்தான் திரைப்படம் தோல்வி மாற்றியது அடுத்தடுத்த படம் வெற்றி படமாக இருக்க..

தற்போது கார்த்தி தொடர்ந்து  பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் கார்த்தியின் திரைப்படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர் அந்தவகையில் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என பல்வேறு படங்களில் நடிக்கிறார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது என்னவோ முதலில் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் திரைப்படம் தான் ஏனென்றால் இந்த படத்தில் கார்த்திக் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் வயசான ஒரு கதாபாத்திரத்திலும் முரட்டுத்தனமான உடல் எடையை ஏற்றி கம்பீரமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்திலும் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் வைரலானது. திரைப்படம் கார்த்தி கேரியரில் மிக ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என தெரியவருகிறது. ரசிகர்களும் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்குகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT தளம் கைப்பற்றி உள்ளதாம். அதுவும் சுமார் 20 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளிவருவதற்கு முன்பாகவே கார்த்தியின் சர்தார் திரைப்படம் இவ்வளவு கோடி அள்ளி உள்ளது மிகப்பெரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment