கட்டாயப்படுத்திய தந்தை.. இயக்குனரை காதலித்து வாழ்க்கையை தொலைத்த பிரபல நடிகை.! உண்மையை உடைத்த பிரபலம்..

viji
viji

தமிழ் சினிமாவில் கோழி கூவுது என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜி. இவர் 80s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அது மட்டும் இல்லாமல் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் விஜி கங்கை அமரனால் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் ரஜினி, விஜயகாந்த், கார்த்தி, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

நடிகை விஜி கடைசியாக சிம்மாசனம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளியாகியது. ஆனால் இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே விஜி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் விஜி குறித்து நடிகரும் பிரபல சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது நடிகை விஜி சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்தில் மிகவும் வெள்ளைந்தியாக இருப்பவர் இவர் மிக எளிதில் மற்றவர்களை நம்பி விடுவார் ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவில் பெரிதாக நாட்டமில்லை ஆனால் தன்னுடைய அப்பாவின் வற்புறுத்தலால் தான் சினிமாவிற்குள் நுழைந்தார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு சிலம்பம் கராத்தே என அனைத்தும் தெரியும்.

அது மட்டும் இல்லாமல் நடிகை விஜி அவர்களுக்கு பிரபல இயக்குனருடன் நெருக்கம் ஏற்பட்டது மேலும் திருமணமான ஒருவருடன்  கிசு கிசுக்கப்பட்டார் ஆனால் அந்த இயக்குனர் நான் விஜியை காதலிக்கவில்லை எனவும் அவர் தோழி எனவும் கூறிவிட்டார்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த இரண்டு மூன்று நாட்களிலேயே விஜி இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டார் என பயில்வான்   ரங்கநாதன் கூறியுள்ளார்.

viji
viji