சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆசை இருப்பதாக கூறிய பிரபல முன்னணி நடிகை.!

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சுவாரசியமான கதைய அம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் காமெடி நடிகராக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்பொழுது நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகிறார். தனக்கே உரியதான நகைச்சுவையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தற்பொழுது இவர் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த பாடலில் இருந்த வீடியோ ஒன்று வெளியானது.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது மேலும் அந்த பட டைட்டிலில் சில மிஸ்டேக்குகள் இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை ஒருவர் சிவகார்த்திகேயன் உடன் நடிக்க மிகவும் ஆசையாக இருப்பதாக சமீப பேட்டி ஒன்று கூறியுள்ளார்.

அது வேறு யாருமில்லை நடிகை வடிவுக்கரசி தான் இவர் வில்லி கதாபாத்திரத்தில் முத்து திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இந்த திரைப்படத்தின் நடித்த அசத்திய இவர் அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.மேலும் தற்பொழுது இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vadivukarasi
vadivukarasi

இந்நிலையில் இவர் சமீப பேட்டி ஒன்றில் எனக்கு காமெடி என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் இப்போது சிவகார்த்திகேயன் நன்றாக நடித்து வருகிறார்.மேலும் நகைச்சுவையும் செய்து நடித்து வருவதால் அவருடன் சேர்ந்து எனக்கு காமெடி பண்ண வேண்டும் என ஆசையாக இருப்பதாகவும் மேலும் என்னை பார்த்தாலே வில்லியாக தெரிகிறதோ இல்லையோ அப்படிப்பட்ட கதாபாத்திரமாகவே அமைகின்றனர். எனவே காமெடியும் நன்றாக பண்ணுவேன் என அவர் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.