விஜயுடன் நடிக்க கூடாது என முடிவு செய்த பிரபல முன்னணி நடிகை!! காரணம் இதுதான்.

0

leading actress refused to act with vijay:விஜய், அஜித திரைப்படங்களில்  நடிக்க ஆரம்பித்த காலத்தில் நடிகை சங்கவி தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் எடுத்துக்கொண்டிருந்தார்.

மேலும் இவர் விஜயுடன் நடித்த விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலவே வா போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை சங்கவி கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டியும் வந்தார்.

மேலும் நடிகை சங்கவி 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முழுமையாக விலகியதாக தெரியவருகிறது.

இவர் தொடர்ந்து விஜய் திரைப்படங்களில் நடித்தபோது இவருக்கும் விஜய்க்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் இவர்களின் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. அதுவே இவர்கள் இணைந்து நடிப்பதற்கு காரணமாக இருந்தது.

ஆனால்  பத்திரிக்கையாளர்களோ இவர்களை இணைத்து பேச ஆரம்பித்து விட்டனர். இதுபோன்ற கிசுகிசு தொடர்ந்து வெளியானதால் நடிகை சங்கவி விஜயுடன் இணைந்து நடிப்பதை நிறுத்தி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.