தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகை.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தினை ராக்கி படத்தினை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் மேலும் லைகா நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

மேலும் வித்தியாசமான கதைகளத்துடன் உருவாக இருக்கும் இந்த படத்தில் மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு பிரியங்கா சிவகார்த்திகேயன், சூர்யா என பல டாப் நடிகர்களுடன் நடித்துவரும் நிலையில் தற்பொழுது மீண்டும் பிரபல நடிகர் தனுசுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

priya mohan
priya mohan

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரியங்கா மோகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், தனுஷிற்கு ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதற்கு முன்பு இவருடைய நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. மேலும் தனுஷ் நடிப்பில் பல வருடங்கள் கழித்து இந்த வருடம் மட்டும் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றுள்ளது.

Leave a Comment