நடிகர் விவேக் நடித்த திரைப்படத்தை ஒன்றும் இல்லாமல் காலி செய்த பிரபல முன்னணி நடிகர்.! கடைசி வரை கெஞ்சியும் கண்டுக்காத தயாரிப்பாளர் சங்கம்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் என்று கூறினால் டக்குனு நமக்கு நினைவுக்கு வருவது செந்தில், கவுண்டமணி தான் இவர்கள் நகைச்சுவை யாராலும் இன்று கூட மறக்க முடியாது அந்த அளவு மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக இருந்தார்கள் அதன் பிறகு வடிவேலு விவேக் என பல நகைச்சுவை நடிகர்கள் திரையில் காணப்பட்டார்கள்.

அந்த வகையில் தங்களுடைய நகைச்சுவை மூலம் மக்களுக்கு கருத்தை கூறி வந்தவர் நடிகர் விவேக் இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வருடம் மரணம் அடைந்தார் இது திரைபிரபலங்களை அதிர்ச்சியாக்கியது. இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பாலக்காட்டு மாதவன். இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளியாகியது.

பாலக்காட்டு மாதவன் திரைப்படத்தில் விவேக் மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தார் முதன் முதலில் இந்த திரைப்படம் சோலோவாக தான் ரிலீஸ் செய்யப்பட இருந்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு மலேசியா என பல இடங்களில் திரையரங்கம் கிடைத்தது. மேலும் கேரளா ரைட்ஸ் கர்நாடக ரைட்ஸ் என படத்திற்கு நல்ல வரவேற்புகள் இருந்தது.

இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த முன்னணி நடிகரின் திரைப்படம் திடீரென ஜூலை 3ஆம் தேதியே ரிலீஸ் ஆனது. இப்படி முன்னணி நடிகரின் திரைப்படம் ரிலீஸ் ஆனதால் விவேக் படத்திற்கு  தமிழ்நாட்டில் கிடைத்த 200 திரையரங்கம் 60 திரையரங்கமாக குறைந்தது மலேசியாவில் கிடைத்த 60 திரையரங்கமும் 16 திரையரங்கமாக மாறியது அதுமட்டுமில்லாமல் கேரளா ரைஸ் கனடா ரைட்ஸ் எல்லாம் திரும்பியது அதனால் படம் படுதோல்வி அடைந்து நஷ்டம் அடைந்தது.

அந்த முன்னணி நடிகரின் திரைப்படத்தை அதே நாளில் வெளியிட வேண்டாம் என்று கூறினோம் ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் யாரும் உதவவில்லை என சில வருடங்களுக்கு முன்பு விவேக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் விவேக் இப்படி கூறியது பலருக்கு வருத்தத்தை கொடுத்தது அது மட்டுமில்லாமல் அந்த நடிகர் யார் என்று கடைசி வரை கூறவே இல்லை.

விவேக்கின் பாலக்காட்டு மாதவன் ரிலீஸ் ஆன ஜூலை 3ஆம் தேதி முன்னணி நடிகரின் திரைப்படமான கமலின் பாபநாசம் திரைப்படம் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version