அட்லியை அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்த பிரபல முன்னணி நடிகர்.! கோபத்தில் இன்று வரையிலும் வெறுப்போடு இருக்கும் விஜய்…

இயக்குனர் அட்லி அவர்களை பிரபல நடிகர் ஒருவர் அசிங்கப்படுத்தியதால் அவருடன் இன்றைய வரையிலும் பேசாமல் வெறுப்புடன் இருந்து வருகிறாராம் நடிகர் விஜய். அதாவது நடிகர் விஜயின் ஆஸ்தான இயக்குனர் என்றால் அது இயக்குனர் அட்லி தான் இவர் விஜய் வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களான தெரி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை ஹாட்ரிக் வெற்றி படமாக கொடுத்து இருக்கிறார்.

மேலும் இவர்களுடைய கூட்டணியில் இன்னொரு படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் அட்லியை ஒரு இயக்குனராக மட்டும் பார்க்காமல் தனது குடும்பத்தில் ஒருவராக பார்த்து வருகிறாராம் அது மட்டுமல்லாமல் அட்லியின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் அழைத்து இருந்தது.

இப்படி அட்லியை குடும்பத்தில் ஒருவராக பார்க்கும் விஜய் அவர்கள் அட்லீயை கமல் அவர்கள் அசிங்கப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது அட்லி அவர்கள் இயக்கும் படங்கள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்ட வெற்றி படங்கள் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.

அந்த வகையில் அட்லி இயக்கத்தில் முதன் முதலில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மௌன ராகம் படத்தின் காபி தான் என சொல்லப்பட்டது அதேபோல ஜவான் படமும் தற்போது சர்ச்சையை தொடர்ந்து வருகிறது இந்த நிலையில் மெர்சல் படம் வெளியான போது அட்லீயை தனது வீட்டிற்கு கமல் அழைத்து இருக்கிறார்.

அங்கு அவருடைய வீட்டில் சுற்றி இருக்கும் சுவர்களில் வெறும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் புகைப்படங்கள் தான் இடம் பெற்று இருந்ததாம், காரணம் மெர்சல் படம் வெளியானபோது அபூர்வ சகோதரர்கள் படத்தின் அட்டகாபி தான் என பேசப்பட்டது. இதை மனசில் வைத்துக் கொண்டுதான் புகைப்படங்களை மாற்றிக்கொண்டு நம்மளை அழைத்திருக்கிறார் என்று சூதகமாக புரிந்து கொண்டார் இயக்குனர் அட்லி.

இந்த விஷயம் விஜய்க்கு தெரியவே தன்னுடைய இயக்குனரை கமல் அசிங்கப்படுத்தி விட்டார் என்று எண்ணி கமலின் எந்த ஒரு விஷயத்திலும் இன்றுவரையிலும் ஈடுபடவில்லை கமலே தன்னுடைய படத்தில் நடிக்க கூப்பிட்டாலும் வேண்டாம் என விஜய் மறுத்துவிட்டாராம். இதுதான் கமலுக்கும் விஜய்க்கும் இடையே வெறுப்பு வர காரணம் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment