மீண்டும் கிராமத்து கதையில் முத்தையா உடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்.?

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் சுல்தான் இந்த திரைப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று தான் ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து நடிகர் கார்த்திக் சுல்தான் படத்தில் நடித்து முடித்த கையோடு தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வம் திரைப்படத்தில் மிக படு பிசியாக நடித்து வருகிறார்.இந்த படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் கார்த்திக் நடிக்கும் புதிய படம் குறித்து ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக மேலும் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கார்த்திக் இதற்கு முன்பே முத்தையா இயக்கத்தில் கொம்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் ஆனது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் மீண்டும் கார்த்திக் இயக்குனர் முத்தையா உடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தகவல் தற்போது இணையதளத்தில் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

karthik
karthik
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment