பிரபல முன்னணி நடிகருக்கு 26 வயதில் இந்த நடிகை மீது தான் ஈர்ப்பு இருந்ததாம்!!

0

Famous leading actor got his attraction at 26 years old to this actress !!கொரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் இயக்குனர்கள்,  தயாரிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது நேர்காணலில் கலந்துரையாடலில் ஈடுபடுவதை வழக்கமாக  வைத்துள்ளனர். அந்தவகையில் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனான மகேஷ்பாபு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு நடிகர் மகேஷ்பாபு பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், ”உங்களுக்கு யார் மீதாவது ஈர்ப்பு இருந்திருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு மகேஷ் பாபு, “இருந்தது. 26 வயதில். அதன்பின் அவரையே மணந்து கொண்டேன். என் மனைவி நம்ரதா ஷிரோத்கர்” என்று பதில் கூறினார்.

இன்னொரு ரசிகர், ”நீங்கள் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “நல்ல நடிகனாக, என் குழந்தைகளுக்கு அற்புதமான அப்பாவாக, என் மனைவிக்கு சிறந்த கணவனாக நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்.

அவரது மகனுக்கும் திரைப்பட நாயகனாக விருப்பமா என்று ஒருவர் கேட்டதற்கு, “அவருக்கு விருப்பம் என்றுதான் நினைக்கிறேன். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

இந்த ஊரடங்கு பற்றிய கேள்விக்கு, “இது ஒரு வாழ்நாள் அனுபவம். பல விஷயங்களை என் குடும்பத்தினரோடு செய்திருக்கிறேன். நான் வேலை செய்து கொண்டிருந்தால் இதையெல்லாம் செய்திருக்க முடியாது” என்று மகேஷ் பாபு கூறினார்.

மேலும் இவர் இறுதியாக பிரபல இயக்குனர் ராஜமௌலி உடன் இணைந்து தனது அடுத்த படத்தை நடிக்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் முக கவசம் அணியவண்டும் என்றும் இந்த புதிய நிலையை ஏற்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

maheshbabu-tamil360newz
maheshbabu-tamil360newz
mahesh-family-tamil360newz
mahesh-family-tamil360newz