கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க போகும் பிரபல இடுப்பழகி நடிகை.? ஒரே சமயத்தில் இரண்டு நடிகைகளுடன் ஆட்டம் போட ரெடியாகும் ஹீரோ.? யார் அது தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் கீர்த்தி சுரேஷ். மேலும் இவரது நடிப்பிற்கு தற்போது தேசிய விருதும் கிடைத்துள்ளதால் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் ஹீரோயினாக நடித்து வந்தாலும் தெலுங்கில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறார் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் செல்லம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வேதாளம் திரைப்படம் தற்போது தெலுங்கில் உருவாக உள்ளது. அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். தமிழில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக சுருதிஹாசன் நடித்திருப்பார் தற்போது தெலுங்கில் அந்த ரோலில் யார் நடிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகை தமன்னா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா இருவருமே நல்லதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து அடுத்த இடத்தை நோக்கி ஓட ரெடியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் இருவருமே இணைந்து ஒரு படத்தில் நடிப்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆசையாகவும் இருக்கிறது வெகுவிரைவிலேயே இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tamanna
tamanna