சைலண்டாக விஜய் சேதுபதி இடத்தை பிடித்த பிரபல இயக்குனர்.. கைவசம் இத்தனை படங்களா.?

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் சேதுபதி குறைந்தது வருடத்திற்கு 10, 12 படங்களில் நடிக்கிறார் தமிழை தாண்டி தெலுங்கு,  ஹிந்தியிலும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடைசியாக தமிழில்  நடித்த படங்களில் விக்ரம் படம் தான் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு இவர் நடித்த டிஎஸ்பி போன்ற படங்கள் சுமாரான பெயரை பெற்று தந்தன. இதில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ள சிறந்த இயக்குனர்களுடன் தற்பொழுது அடுத்தடுத்த படம் பண்ணி உள்ளார் அதில் முதலாவதாக விடுதலைப் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது இது தவிர ஹிந்தியில் கிறிஸ்மஸ், மும்பைக்காரர் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இருப்பினும் தற்பொழுது விஜய் சேதுபதியின் மார்க்கெட் சற்று சரிவில் தான் இருக்கிறது. இந்த நேரத்தை சரியாக ராகவா லாரன்ஸ் பயன்படுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோ, வில்லன் என நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் 2023 மட்டும் குறைந்தது 5, 6 படங்களில் நடித்து வருகிறார்.

முதலாவதாக எஸ் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்கியா, காளி வெங்கட் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் அதனை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை பி. வாசு இயக்கி வருகிறார். அடுத்ததாக காஞ்சனா 4, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், துர்கா மற்றும் அதிகாரம் போன்ற படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இதன் மூலம் விஜய் சேதுபதியை விட அதிக படங்களில் இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி போகும் பட்சத்தில் விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்து ராகவா லாரன்ஸ் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment