பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் பிரபல இயக்குனர்.!! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

0

famous director who is directing the biography of Pasumpon Muthumalinga Devar.!! First Look Poster: பிரபல முன்னணி நடிகரான விஜயகாந்த், அருண் பாண்டியன், மற்றும் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் 1986 இல் வெளியான ஊமை விழிகள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் அரவிந்தராஜ்.

பின் இதனைத்தொடர்ந்து இவர் உழவன் மகன், தாய்நாடு, சத்திய வாக்கு, தங்கபாப்பா, கருப்பு நிலா, முஸ்தபா, இரண்டு முகம், கவிதை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தற்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த திரைப்படம் ஏ ஆர் பெருமாள் பசும்பொன் தேவர் பற்றி எழுதிய முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ஜெ. எம். பஷீர் என்பவர் தேவராக நடிக்க இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு தேசிய தலைவர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய வரலாற்று தலைவர்கள் இடம் பெறுவதால் அதில் நடிக்க பிரபல நடிகர்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்ட பின் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

pasumpon muthu ramalinga devar-tamil360newz
pasumpon muthu ramalinga devar-tamil360newz