பிரபல இயக்குனரும் நடிகருமான ‘விசு’ மரணமடைந்தார்.! அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்

பிரபல நடிகர் விசு 1941 முதல் 2020 வரை இந்திய தமிழ் திரைப்பட நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா எனப் பல வகைகளில் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர், இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இந்த திரைப்படத்தை மீண்டும் இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டது இந்த திரைப்படம் பிலிம்பேர் விருதையும் பெற்றது, இயக்குனர் விசு தமிழில் தலைசிறந்த இயக்குனரானா பாலச்சந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்பு இயக்குனர் ஆனார், விசுவின் திரைப்படம் பெரும்பாலும் குடும்ப திரைப்படம் சமூக திரைப்படம் தான்.

இயக்குனர் விசு முதன்முதலில் தில்லுமுல்லு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார், 2013ஆம் ஆண்டு அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இவர் சன் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியவர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக உடல் நலம் முடியாமல் இருந்ததால், கடந்த சில நாட்களாக மோசமான நிலையில் இருந்தார், இந்த நிலையில் இன்று தீவிர சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார், இவரின் மரணம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment