பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் கதையை திருடிதான் இந்த படத்தை எடுத்தார்.! அடித்து கூறிய ராதாரவி, ஷாக் ஆகும் சினிமா ரசிகர்கள்

நடிகர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கும் திரைப் படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே காத்துக்கொண்டிருக்கிறது படத்தை காண, தற்பொழுது இவர் கமலை வைத்து இந்தியன்-2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதால் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது கோலிவுட் வட்டாரத்தில்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் நாடக நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது, இந்த  நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார் அவர் பேசியபோது எனக்கு திமிர் என்பது எனக்குள்ளேயே இருக்கிறது, ஒய் ஜி மகேந்திரன் நாடக கதையை பலர் திருடினார்கள். இதை நான் அடித்துக் கூறுவேன் எனக் கூறினார்.

பிரமாண்ட இயக்குனர் சங்கரும் ‘ரூபாய்க்கு மூன்று கொலை’ என்ற நாடகத்தின் போது ஓரமாக உட்கார்ந்து பார்ப்பர், அந்த நாடகங்களைப் பார்த்து தான் இரட்டை வேடத்தில் உள்ள கதைகளை எடுத்துள்ளார் என அடித்துச் சொல்வேன் என மேடையிலேயே பகிரங்கமாக கூறினார். மேலும் என் ஆர் சி மற்றும் என்டிஆர் அப்பா பெயரை கேட்டாலே கோபப்படுகிறார்கள்.

மேலும் பேசிய அவர் சிஏஏ பற்றி தெரிந்தவர்கள் போராட மாட்டார்கள், எதற்காக போராடுகிறார்கள் என்று அறிவாலயத்தில் தான் கேட்கவேண்டும் சட்டப்பேரவையில் முதல்வர் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் வெளியேறுகிறார்கள், கேள்விக்கு பதில் சொல்லாமல் இந்தியாவின் அமைதியைக் கெடுக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

மேலும் ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் நல்ல நாடகங்களை போடுகிறார், மேலும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் முதன்முறையாக பாஜக அரசு தமிழரை பதவியில் அமர்த்தியுள்ளது என மேடையில் அவர் குறிப்பிட்டார், சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ராதாரவி பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment