சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை கிண்டல் செய்து படம் !! சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்.

0

Rajinikanth: தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. இவரின் திரைப்படங்கள் எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருக்கும். அவரது படம் மட்டுமல்லாமல் அவருடைய டுவிட்டுகளும் சர்ச்சை எழுப்பும் விதமாகவே இருக்கும்.

அதிலும் குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் பதிவிட்ட ட்வீட்டுகள் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இவர் தற்போது ஆர்ஜிவி மிஸ்ஸிங் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும் நிலையில் போஸ்டர்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அவர் அப்படி தற்போது வெளியிட்ட போஸ்டரில் ரஜினிகாந்த் போலவே ஒருவர் இருக்கிறார். மேலும் அதோடு சேர்த்து இவர் ஆர்ஜிவி திரைப்படத்தின் கஜினிகாந்த் எனவும் வேறு யாருடைய சாயலும் தெரிந்தால் அது முற்றிலும் தற்செயலானது என்று ராம் கோபால் வர்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன் இவர் சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றோரின் சாயலில் சில நடிகர்கள் நடித்துள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தை கிண்டல் செய்வதற்காக இந்த கஜினிகாந்த் கதாபாத்திரத்தை வைத்துள்ளாரோ என ரசிகர்கள் கேள்விகேட்கின்றனர். மேலும் அதோடு பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்ன செய்துள்ளார் எனவும் கூறுகின்றனர்.