லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் – எந்த படம் தெரியுமா.? வெளிவந்த தகவல்.

nayanthara-and-sreesanth
nayanthara-and-sreesanth

இந்திய அணியில் ஒரு கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளராக பணியாற்றிய பல வெற்றிக்கு உறுதுணையாக ஸ்ரீசாந்த். சச்சின் கங்குலி போன்றவர்களுடன் இவர் விளையாடிய தனது திறமையை வெளி காட்டி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டி என அனைத்திலும் பங்கு பெற்று தனது திறமையை வெளி காட்டியவர் அதுமட்டுமல்லாமல் பல்வேறு IPL அணிகளுக்கு இவர் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் சில சர்ச்சைகளில் சிக்கிய காரணத்தினால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

சில ஆண்டுகளுக்கு ஸ்ரீசாந்த் இருக்கின்ற இடம் தெரியாமல் காணாமல் போனார். திரும்பி வந்த  ஸ்ரீசாந்த் ஐபிஎல் – லில் திறமையை நிரூபிக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார் ஆனால் அதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வருகிறார்.

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஸ்ரீசாந்த் தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமாகி நடித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட இப்படி ஒரு நல்ல படம் மற்றும் குழுவுடன் நான் தமிழில் அறிமுகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீசாந்த ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ஆனால் படத்தின் கதாபாத்திரத்தைப் பற்றிய அவர் இப்போ பேச விரும்பவில்லையாம்.