இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஆகவும், கீப்பர் ஆகவும் செயல்படுபவர் எம்எஸ் தோனி. இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியது இவருக்கு கடைசி போட்டியாக தற்போது வரை அமைந்துள்ளது. இதுவரையிலும் வேற எந்த ஒரு போட்டியிலும் பங்கு பெறாமல் இருந்ததால் இவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அவரை இந்திய அணியில் பார்க்க முடியாவிட்டாலும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து தோனி அவர்கள் தற்பொழுது வீட்டிலேயே முடங்கி உள்ளார்.இந்த நிலையில் போரடிக்காமல் இருக்க வீட்டை சுத்தி பைக்கில் உலா வந்து கொண்டிருந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது தோனியும், தோனி மகள் லிசாவும் புல் தரையில் உட்கார்ந்துகொண்டு தனது செல்லப் பிராணியான நாய்க்கு பந்தை தூக்கிபோட்டு விளையாடும் வீடியோ சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சாக்ஸி எடுத்த இந்த வீடியோவை சிஎஸ்கே டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்
இதோ அந்த வீடியோ.
#Thala @msdhoni's back…quite literally so! ? #WhistlePodu VC: @SaakshiSRawat pic.twitter.com/UmZmb9A9uf
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2020