மாவீரன் படத்தில் இணைந்த “பிரபல காமெடி நடிகர்” – அட இவரா.. வெளிவந்த உறுதியான தகவல்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான வெற்றியை ருசிக்கின்றன அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து சந்தோஷத்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் கையில் தற்பொழுது அயலான், பிரின்ஸ்  மற்றும் மாவீரன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் பிரின்ஸ் படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தற்பொழுது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டுள்ள திரைப்படம் மாவீரன். ஏனென்றால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்தது அதில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய லுக்கில் இருக்கிறார். அதுவே ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நடிகர் நடிகைகளையும் பட குழு தட்டி தூக்கி வருகிறது தற்பொழுது கூட பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவையும் மாவீரன் படத்தில் இணைத்துள்ளது படக்குழு.

யோகி பாபு மற்றும் சிவகார்த்திகேயன் காம்பினேஷன் எப்பொழுதுமே ஒரு வெற்றி காம்பினேஷன் தான் அந்த வகையில் மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை தற்பொழுது தயாரிப்பு நிறுவனமே உறுதியாக மாவீரன் திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார் என்பதை வெளியிட்டுள்ளது.

Leave a Comment