வெற்றி வெற்றி என வடிவேல் போல் ஓடி வந்து சந்தோஷத்தை பகிர்ந்த சதீஸ்.! வாழ்த்து கூறும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். இவர் எந்த படங்கள் நடித்திருந்தாலும் அந்த படத்தில் இவருக்கு என ஒரு பெயரை பெற்றிருப்பார். இதனை அடுத்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் இவர் ஸ்பெஷலிஸ்டாக இருந்து வருகிறார்.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் இதன்மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கொரோனா காலகட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதேசமயம் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 என்ற திரைப்படத்திலும் இவர் தனது முழுத் திறமையையும் கொண்டு நடித்து வருகிறார். இதனை அடுத்து கடந்த வருடம் இவருக்கும் சிந்து என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றிருந்தது.

இதனை அடுத்து இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த சந்தோசத்தை ரசிகர்களுக்கு பகிரும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் நடிகர் சதீஷ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment