பல கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிய ராஜாராணி திரைப்பட நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

0

famous cinema celebraties bought a car on 2 crores photo viral:தமிழில் ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பெங்களூர் டேஸ் என்ற திரைப்படத்தில் 2014ஆம் வருடம் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் மலையாள முன்னணி நடிகரான பகத் பாசில் என்பவரும் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். அவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பகத் பாசில் நஸ்ரியாவை விட பத்து வயது மூத்தவர் இருந்தாலும் நஸ்ரியா அவரை திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஆனால் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர்கள்  இருவரும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.

மேலும் இந்த தம்பதியினர் தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கி உள்ளனர். அதோடு அந்த கார் பச்சை நிறத்தில் உள்ளதால் இதைப்பார்த்த ரசிகர்கள் ஏதாவது கார் விளம்பரத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுவாகவே யாரும் காரை பச்சை நிறத்தில் வாங்க மாட்டார்கள் ஆனால் இந்த தம்பதியினர் வித்தியாசமாக பச்சை நிறத்தில் இவ்வளவு செலவு பண்ணி வாங்கியுள்ளதால் ரசிகர்கள் இப்படி ஒரு கேள்வியை எழுதியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

nazriya-1
nazriya-1