தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்து வந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறது.அதுவும் முக்கியமாக தமிழக அளவில் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளிவந்து வெற்றினை பெற்றது இதனைத் தொடர்ந்து தற்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இவருடைய 169 திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவுள்ளது இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர்கள் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தில் தற்பொழுது புதிய கதாபாத்திரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 80 கட்டத்தில் அறிமுகமாகி தற்பொழுது ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் சரவணன். இவர் கார்த்திக் நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். மேலும் இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தில் சரவணன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் அடுத்தடுத்து இந்த திரைப்படத்தில் இன்னும் எத்தனை பிரபலங்கள் இணைவார்கள் என்பதை விரைவில் பல குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.