தந்தை மகன் என பாகுபாடு இன்றி இருவருடனும் ஜோடி போட்ட பிரபல நடிகைகள்..! அதுவும் 24 வயது வித்தியாசத்திலா..!

60 மற்றும் 70களில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளாக இருந்து தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் அவர்கள் அப்பா மகன் என பாகுபாடு இன்றிஅனைவரிடமும் ஜோடி போட்டு நடித்தது மட்டும் இல்லாமல் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைகள் என்றும் திரை துறையில் குணச்சித்திர கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். பொதுவாக கோலிவுட் சினிமாவில் ஜாம்பவானாக ரசிக்கப்படும் நடிகர் என்றால் அவர் சிவாஜி கணேசன் மற்றும் அவருடைய மகன் பிரபு ஆகிய இருவருமே  அந்த வகையில் ராதா மற்றும் அம்பிகா இவர்கள் இருவருடனும் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களுடைய ஜோடி மிகவும் பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் இவர்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது அந்த வகையில் 1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான முதல் மரியாதை என்ற திரைப்படத்தில் கூட ராதா சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

மேலும் இதனை தொடர்ந்து சிவாஜி கணேசன் உடன் அவர் நடித்தது மட்டும் இல்லாமல் அவருடைய மகன் பிரபுவுடன் ஆனந்த் மற்றும் அண்ணா நகர் முதல் தெரு போன்ற திரைப்படங்களிலும் இணைந்து நடித்துள்ளார் அதேபோல வாசு இயக்கத்தில் வெளியான நீதியின் நிழல் என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பிரபு ஆகிய இருவருமே சேர்ந்து நடித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து சிவாஜி கணேசன் அவர்களும் அம்பிகாவுடன் வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார் இந்த திரைப்படம் இளையராஜா இசையமைப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இப்படிப்பட்ட ஜோடியில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை கண்டு பலரும் வாய்ப்பிலக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த திரைப்படம் வெளிவந்த போது சிவாஜிக்கு 56 வயது ஆன நிலையில் அம்பிகாவுக்கு வெறும் 22 வயது மட்டுமே ஆகி இருந்தது. மேலும் அப்பாவுக்கு பஞ்சம் இல்லாமல் பிரபு உடனே அம்பிகாவுடன் வெள்ளை ரோஜா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இவ்வாறு அப்பா மகன் என இருவருமே அம்பிகா ராதா என இருவருடனும் ஜோடி போட்டு நடித்தது சமூக வலைதள பக்கத்தில் அந்த நாளில் பேசும் பொருளாக இருந்தது.

Leave a Comment

Exit mobile version