யோகி பாபுவின் நடிப்பை பார்த்து அசந்துபோன பிரபல நடிகை.! சொன்னது மட்டும் இல்லிங்க இதையும் தூக்கி கொடுத்து இருக்காரு.! சந்தோஷத்தில் திளைக்கும் காமெடி நடிகர் .

0

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்கள் படங்களுக்கு காமெடியனாக நடித்து அசத்தி வருபவர் நடிகர் யோகிபாபு ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதன்பின் தனது திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது டாப் நடிகர்கள் படங்கள் என்றால் இவர் தான் நடிப்பார் என்ற அளவிற்கு மாறியிருக்கார். அந்த அளவிற்கு தற்போது ரசிகர்,மக்கள் மத்தியில் ரீச் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டாப்  படங்களை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் தற்போது முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் கோலமாவு கோகிலா படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார் அதைத் தொடர்ந்து தற்போது இவருக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்களும் தற்போது தமிழ் சினிமா படங்களில் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய ஹிட் அடித்த படம் தான் “மண்டேலா”. இந்த படத்தில் யோகிபாபு  சவரம் செய்யும் நபராக நடித்து அசத்தியிருக்கிறார் மேலும் இந்த படம் காமெடியாகவும் அதேசமயம் கருத்துள்ள திரைப்படமாகவும் அமைந்துள்ளது.

இந்த படத்தில் இவரது நடிப்பு அசாதாரணமாக இருந்ததால் பல பிரபலங்களும் இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு யோகிபாபு, மனோடா அஸ்வின்  ஆகியவர்களை புகழ்ந்து தள்ளியதோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சில பதிவுகளையும் பதிவு செய்திருந்தார் அவர் கூறியது.

யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் மனதில் பதிந்த நல்லதொரு படம்தான் “மண்டேலா” இதில் யோகி பாபு மற்றும் மனோடா அஸ்வின் நடிப்பு அபாரமாக இருந்தது.  இதோ எனது அன்பை வச்சிக்கோங்க என குறிப்பிட்டார் பிரியா பவானி சங்கர்.