90 களில் டாப் ஹீரோக்களை ஓடவிட்ட பிரபல நடிகை.. பொத்தி பொத்தி வைத்திருந்த ரகசியத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்

0
actors
actors

80,90 – களில் தென்னிந்திய சினிமாவை தான் கண்ட்ரோலில் வைத்திருந்த அவர் நடிகை ஊர்வசி. இவர் முதலில் பாக்கியராஜ் இயக்கி, நடித்த “முந்தானை முடிச்சு” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தால் பேரையும், புகழையும் சம்பாரிதார்.. மேலும் பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன.

இருப்பினும் ஊர்வசி நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். இதனால் அவருடைய மார்க்கெட் வளர்ந்தது, நடிப்பு திறைமையும் வளர்ந்து கொண்டார். இதனால் 80 களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். காலங்கள் போக போக வயது முதிர்வின் காரணமாக..

இப்பொழுது குணச்சிதர கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார். அதுவும் டாப் ஹீரோ சூர்யா, ராகவா லாரன்ஸ், RJ பாலாஜி போன்றவர் படங்களில் அம்மா, சித்தி மற்றும் குணத்திர கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஊர்வசி பற்றி பிரபல தயாரிப்பாளர் நடிகருமான சித்ரா லக்ஷ்மணன்..

சமிபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. ஊர்வசி ஒரு அசாத்தியமான நடிகை.. அவரது நடிப்புக்கு இணையாக நம்மால் நடிக்க முடியாது என்ற பயம் அவருடன் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் தோணும்..

ஆற்றல் இல்லாத ஒரு நடிகர் ஒருவர் தான் ஊர்வசி உடன் நடித்தால் நமது நடிப்பு பலம் இறங்கி விடுமோ என்ற பயம் இருந்ததற்கு வாய்ப்புண்டு என அவர் கூறினார்.  அப்படி என்றால் ஊர்வசியின் நடிப்பு திறமையை பார்த்து பல டாப் நடிகர்கள் அவருடன்  நடிக்க பயந்துள்ளனர் என்பதை மறைமுகமாக இவர் சொல்லுகிறார் எனக் கூறிய ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.