விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை!! அவருக்கு பதில் யார் தெரியுமா…

actress who left vijaysethupathy movie: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தொடர்ந்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் ரசிகர்கள் இவரது 800 திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திரைபடத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். அதை தொடர்ந்து இவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கும் மேல் திரைப்படம் உள்ளது.

அந்த படங்களில் முக்கியமான ஒன்று தான் “துக்ளக் தர்பார்” என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். இந்த திரைப்பட ஷூடிங் கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகை அதிதி ராவ் ஹைதரி தற்போது இந்த திரைப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

இவர் இந்த திரைப்படத்திலிருந்து விலகியதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்ததில் கொரானா வைரஸ் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சினையால் திரைப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறி உள்ளார்.

எனவே அவரை தொடர்ந்து இந்தத் திரைப்படத்தில் நடிக்க விஜய்சேதுபதியுடன் ஏற்கனவே சங்கத் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராசி கண்ணா  ஒப்பந்தம்செய்துள்ளனர். மேலும் நடிகை ராசி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மீண்டும் விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

adhithirao
Vijay-Sethupathi-with-Raashi-Khanna

Leave a Comment

Exit mobile version