“பிசாசு 2” படத்தில் ஆண்ட்ரியாவை அலறவிட களத்தில் குதிக்கும் பிரபல நடிகை.! வாங்க மேடம் இதுக்கு நீங்க தான் செட் அவிங்க.. கொண்டாடும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா. டாப் நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து தனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.

இவர் கடைசியில் விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து தற்போது சோலோவாக முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதை களை எடுக்கும் இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிசாசு படத்தின் முதல் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அப்பொழுதிலிருந்து எகிரி இருந்த நிலையில் தற்போது மிஷ்கின் நடிகை ஆண்ட்ரியா வைத்து தற்போது பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் டாப் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்த நிலையில் இப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது வெப் சீரிஸ் பக்கங்களில் சிறப்பாக தலை காட்டி நடித்து வந்த நமீதா கிருஷ்ணமூர்த்தி பிசாசு 2 படத்தில் கமிட்டாகி உள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. வெகு விரைவிலேயே இத்திரைப்படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.