ஜெயலலிதாவாக நடிக்க போவது இந்த நடிகையா.? பத்து பொருத்தமும் பக்காவா இருக்கே.!

வெள்ளித்திரையில் கடந்த சில ஆண்டுகளாகவே வரலாற்று சார்ந்த திரைப்படங்களாக பல இயக்குனர்களும் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் பல முக்கிய பிரபலங்கள் தங்களது வாழ்க்கையில் இப்படித்தான் நடந்துள்ளார்கள் என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் என்று பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் பார்த்தால் மறைந்த முன்னாள் நடிகையும் மற்றும் முதலமைச்சரும்மாகிய ஜெயலலிதாவை வைத்து தலைவி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்ததை நாம் பார்த்திருப்போம். அது போல தற்பொழுதும் நடிகை ஜெயலலிதாவை மையப்படுத்தி இன்னொரு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதில் சுந்தரபாண்டியன்,சத்திரியன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் தற்பொழுது ஒரு வெப் தொடரை இயக்க உள்ளாராம் அதிலும் குறிப்பாக மதுரை பின்னணியில் உருவாகும் இந்த வெப் தொடரில் அரசியலை மையப்படுத்தி தான் முழுக்க முழுக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் இவர் இயக்கப் போகும் இந்த வெப் தொடரில் ஜெயலலிதாவாக நடிக்கப் போவது நடிகை வாணி போஜன் என்று தகவல் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை வாணி போஜன் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களின் மூலம் நடித்து மக்களிடையே தனக்கென ஒரு இடம் பிடித்தவர் அதிலும் குறிப்பாக இவர் நடித்த தெய்வமகள் என்ற சீரியல் இவருக்கு சின்னத்திரையில் ஒரு நல்ல இடத்தை பிடித்து கொடுத்து விட்டது அந்த சீரியலை தொடர்ந்து இவர் மக்களிடையே மிகவும் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.

vanibhojan
vanibhojan

சின்னத்திரையில் கலக்கியது போதாது என்று வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த வெப் தொடரில் நடிகை ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதனை தொடர்ந்து பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment