தற்பொழுது எல்லாம் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி ஏராளமான நடிகைகள் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் அந்த நடிகைகளுக்கு விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று விடுகிறார்கள்.
நடிகையாக நடிக்க வேண்டும் என்ற கனவுடன் மாடலாக பணியாற்றி கலை வாழ்க்கையை தொடங்கினார். நேஹா ஜா.மாடலாக பல விளம்பர படங்கள் மற்றும் போட்டோஸ் ஓட்டுகள் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவ்வாறு பிரபலமடைந்த பிறகுதான் இவருக்கு சின்னத்திரை நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த நினைத்தாலே இனிக்கும் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இந்த சீரியலில் தமன்னா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நேஹா ஜா. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவர் சின்னத்திரையில் ஹீரோயினாக கலக்கிய இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் ஹீரோயினாக களமிறங்கிவுள்ளார். அதாவது விமல் ஹீரோவாக நடிக்கும் தெய்வமச்சான் திரைப்படத்தில் நேஹா ஜா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இவர்கள் நடிக்க இருக்கும் இத்திரைப்படத்தினை உதய் ப்ரோமோஷன் மற்றும் மேஜிக் டச் பிக்சர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
மார்டின் நிர்மல் குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க இருக்கும் நேஹா ஜாக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவர் ரசிகர்களிடம் சப்போர்ட் அளிக்கும்மாறு கேட்டுள்ளார்.
