தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து புதிய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி அடுத்ததாக கலர்ஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர், நடிகைகளை வைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நிக்கி கல்ராணி நடுவராக பங்கேற்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இவர் தொகுத்து வழங்க உள்ள இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு வெல்லும் திறமையான பெயர் வைத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் நிக்கிகல்ராணி தொடர்ந்து இன்னும் இரண்டு சிறப்பு நடுவர்களும் பங்குபெற உள்ளார்கள். போட்டியாளர்களின் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதை நிகழ்ச்சியின் நோக்கம். மேலும் இந்நிகழ்ச்சியில் மாறுபட்ட திறமைகளை உடையவர்கள் பங்கேற்கலாம்.
அதாவது நடனம், மாயாஜாலம், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல வித்தியாசமான திறமை உடையவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தலாம். வெற்றி பெறுபவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது நிகழ்ச்சி கிட்டத்தட்ட 16 வாரம் வரை ஒளிபரப்பாகவுள்ளது.

இவர் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான ஆண்ட்ரூஸ் தொகுக்கவுள்ளார். இவ்வாறு வித்யாசமாக இருக்கும் இந்நிகழ்ச்சியினை பார்ப்பதற்காக அனைவரும் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு திருமணமான பிறகு முதன்முறையாக நிக்கி கல்ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கி கல்ராணி தொடர்ந்து கராத்தே நிபுணர் ஷிஹான் ஷீசைனி மற்றும் பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர்கள் நடுவராக பங்கேற்க உள்ளனர்.