டாப் ஹீரோக்களுடன் நடிச்சி ஒரு பிரயோஜனமும் இல்ல.? நயன்தாரா ரூட்டை பின்பற்றும் பிரபல நடிகை.

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமா உலகில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற சிறப்பான படங்களை கொடுத்து தன்னை சினிமா உலகில் தக்கவைத்துக் கொண்டார். அவரது திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான காரணத்தினால் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

சினிமா உலகில் சிறப்பாக ஓடி கொண்டிருக்கும் இவர் இப்போது கூட விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க போலீஸ் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தற்போது எடுத்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் முதன் முறையாக வெற்றிமாறன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்திற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறன் சமீபகாலமாக தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்பொழுதுகூட கோபி நாயனார் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக இந்த படக்குழு நயன்தாராவை வைத்து அறம் என்னும் ஒரு சூப்பர் ஹிட். படத்தை கொடுத்து அதைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியாவை வைத்து இதே படக்குழு இயக்கி வருவதால் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக ஆண்ட்ரியாவுக்கும் எந்த ஒரு திரைப்படங்களும் பெரிய அளவில் கிடைக்காததால் நயன்தாராவை தற்போது பின்தொடர்ந்து உள்ளார். முக்கியத்துவமுள்ள திரைப்படங்கள் வெற்றியை பெறும் அதை நயன்தாரா பின்தொடர்ந்து வந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா பின் தொடர்வதால் அவரது வளர்ச்சி அதிகமாக இருக்கும் என தெரியவருகிறது.

Leave a Comment