நயன்தாராவை பின்தொடரும் பிரபல நடிகை.? நயன்தாரா வசிக்கும் அப்பார்ட்மெண்டிலேயே பிளாட்டை வாங்கி அசத்தி உள்ளார்.! எங்கு தெரியுமா.?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடைசியாக ரஜினியுடன் இணைந்துதர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நெற்றிகண், தனது காதலன்விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது படங்களையும் தயாரித்து வருகிறார் அந்த வகையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து கூழாங்கல்  என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்.

இந்த படம் சர்வதேச திரை விழாவில் காண்பிக்கப்பட்டடு விருதையும் வாங்கியது இதுகுறித்து தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், நயன்தாரா பேசிய வீடியோ சமூக வலைத்தளபக்கத்தில் வைரலாகின.

இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையிலுள்ள எழும்பூரில் புதிதாக  அப்பார்ட்மெண்டில் மூன்றாவது பிளாட்டை வாங்கி வசித்து வருகின்றனர் இவரைத் தொடர்ந்து அதே அப்பார்ட்மெண்டில் 7வது பிளாட்டை வாங்கியுள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

மேலும் நடிகை நிக்கி கல்ராணி சென்னையில் இன்னொரு புதிய வீட்டையும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment