சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்தில் சிம்புக்கு தங்கையாக இந்த பிரபல இளம் நடிகையா!! புகைப்படம் உள்ளே..

famous actress who act in sister role with actor simbu  photo viral: தற்போது சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பாரதிராஜா அவர்கள் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப் படத்தின் ஷூட்டிங் தற்போது திண்டுக்கல்லில் போய்க்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை நீதி அகர்வால் அவர்கள் நடிக்கின்றார். சுசீந்திரன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பார் தமன் அவர்கள் இசையமைக்கவுளளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஏற்கனவே சிம்புவின் ஒஸ்தி, வாலு போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை  ஜீரோ, இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் போன்ற திரைப்படங்களை தயாரித்த மாதவா மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 26 ஆம் தேதி விஜயதசமி அன்று படக்குழு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சிம்புக்கு தங்கையாக அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை நந்திதா ஸ்வேதா அவர்கள் நடிப்பதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

nandita-swetha

Leave a Comment

Exit mobile version