பிரபல நடிகையின் குழந்தையை சூப்பர்ஸ்டார் ஸ்டைலில் கண்ணாடி போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமீரா ரெட்டி இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இதனை தொடர்ந்து அவர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் தொழிலதிபர் அக்ஷய் வார்த்தேவ் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமீராரெட்டி அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தனது மாமியாரிடம் இருந்து சமைப்பது, ஆடுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதுவும் தற்போது தனது ஒரு வயது கூட நிரம்பாமல் இருக்கும் தனது  மகள் நைரா கருப்பு கண்ணாடி போடும் வீடியோவை சூப்பர்ஸடார் ஸ்டைலுடன் ஒப்பிட்டு  அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version