மேக்கப் ரூமுக்கு வந்து அந்த இயக்குனர் என் மேல கைய வச்சுட்டாரு.! அட்ஜஸ்ட்மென்ட்க்கு 15 லட்சம்… பரபரப்பை கிளப்பிய ஜனனி.!

janani
janani

நக்கலைட்ஸ், மைக் செட் போன்ற youtube சேனல் போலவே நரி கூட்டம் என்ற youtube சேனலில் லீட் ரோட்டில் நடித்தவர் தான் நடிகை ஜனனி. இவர் ஒரு youtube சேனல் பேட்டி ஒன்றில் அதிர்ச்சியான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது  நரி கூட்டம் என்ற youtube சேனலில் நடித்துக் கொண்டிருக்கும் போது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதன் பிறகு அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது லீட் ரோலில் தன்னை நடிக்க சொன்னதாகவும் அப்போது அந்த லீட் ரோலில் நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர் அல்லது தயாரிப்பாளர், நடிகர் மூன்று பேருடனும் அஜஷ்மென்ட் பண்ண வேண்டும் என கேட்டுள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஜனனி அட்ஜஸ்ட்மெண்டா முடியவே முடியாது என கூறியிருக்கிறாராம்.

அதன் பிறகு உடனே 3 லட்சம், 5 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் என பேரம் பேசியதாக கூறியுள்ளார். அதன் பிறகு அந்தப் படத்தில் இருந்து விலகியதாகவும்  ஜனனி கூறியுள்ளார். அதன் பின்னர் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் நான்கு நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் மேக்கப் ரூமிற்கு சென்று மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் என் சோல்டர் மீது கை வைத்துள்ளார்.

அந்தப் படத்தில்  என்னுடைய நண்பர் தான் ஹீரோவாக நடித்தார் அவர் சொல்லி தான் நான் அங்கே போனேன். போன் செய்து ஒரு பிரச்சனை என கூறினேன் ஆனால் அவர் எதுவுமே சொல்லவில்லை அதன் பிறகு அவருடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டேன். பின்னர் அந்த படத்திலிருந்து பாதையிலேயே விலகி விட்டேன் என அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் முகபாவனை அல்லது உடல் ஷேப் ஏதாவது இருக்க வேண்டும் இதற்காகவே தனது உடலை ஷேப்பாக மாற்றிக் கொண்டேன். அப்படி இல்லை என்றால் ஒல்லியாக இருக்கீங்க உங்களுக்கு படவாய்ப்பு கிடைக்காது என ஒதுக்கி விடுவார்கள் என்று ஜனனி அவர்கள் கூறியது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.