ஜஸ்ட் 10 நிமிஷம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணா போதும் லேடி சூப்பர் ஸ்டார் படத்தில்நடிக்க வாய்ப்பு.? இளம் நடிகைக்கு ஆடிஷன் என்ற பெயரில் நடந்த கொடுமை…

அன்றிலிருந்து இன்று வரை சினிமாவில் அட்ஜஸ்மென்ட் தலைவிரித்து ஆடி வருகிறது இதனை சில நடிகைகள் வெளிப்படையாக பேசுவார்கள் சில நடிகைகள் அமைதியாக இருந்து விடுவார்கள். ஆனால் சமீப காலமாக பல நடிகைகளும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அக்கட தேசத்தில் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் இருக்கும் நடிகையுடன் இளம் நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்க ஆசைப்படுவதுண்டு.

அப்படி எப்படியாவது லேடி சூப்பர் ஸ்டார் உடன் நடித்து விட வேண்டும் என ஏங்கியவர் தான் இளம் நடிகை இவர் லேடி சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடிக்க வேண்டும் என்று ஆடிஷனுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு தனியாரையில் தான் ஆடிசன் நடந்துள்ளது அங்கு ஆடிசன் நடத்துபவர் உன் தலை கலைந்துள்ளது போய் அந்த ரூமில் சரி செய்து கொண்டு வா எனக் கூறியுள்ளார்.

அவரும் சென்றுள்ளார் அவர் பின்னாடியே ஆடிஷன் எடுப்பவரும் சென்றுள்ளார் கூந்தலை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது பின்புறமாக வந்து கண்ட இடத்தில் கை வைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இறுக்கமாக கட்டி பிடித்துள்ளார் அந்த பிடியிலிருந்து வெளியே விடுபட முயற்சித்தும் முடியவில்லை. ஆடிசன் எடுக்கும் நபர் வெறும் பத்து நிமிடம் மட்டும் அட்ஜஸ்மென்ட் செய் உனக்கு லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தருகிறேன் என கூறியுள்ளார்.

அந்த இளம் நடிகை கத்திக் கொண்டு அங்கிருந்து கேமராவை தள்ளிவிட்டு அவரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு ஓடி வந்து விட்டார் வெளியில் அந்த இளம் நடிகையின் அம்மாவும் தங்கையும் இருந்துள்ளார்கள் அவர்கள் இருக்கும் பொழுது இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. பல இடங்களில் சினிமா பிரபலங்கள் கண்ணியமாக நடந்து கொண்டாலும் ஒரு சில இடங்களில் இது போன்று நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் சினிமா தரப்பில் இருந்து எடுக்கவில்லை சினிமாவிற்கு வரும் புது நடிகர் மற்றும் நடிகைகள் என பலரும் இது போல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அவர்கள் வெளியில் சொன்னால் இண்டஸ்ட்ரியை விட்டு ஒதுக்கி விடுவார்கள் என்பதற்காகவே பலரும் வாயை மூடி கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அந்த இளம் நடிகை இவ்வளவு நாள் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார் ஆனால் இப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வருவதால் மிகவும் போல்டாக தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி உள்ளார்.

Leave a Comment