பட வாய்ப்பு கிடைக்காததால் வேற தொழிலை செய்யும் நடிகைகள்.! அட இந்த முன்னணி நடிகையுமா.!

0
actress
actress

தமிழ் சினிமாவில் தற்போது புதுமுக நடிகைகள் நடிக்க வருவதால் பழைய நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் ஒரு சில பழைய நடிகைகள் சினிமாவில் ஏதோ ஒரு சில திரைப்படங்களில் தோன்றுகிறார்கள் ஆனால் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகள் தற்போது என்ன வேலை செய்து வருகிறார்கள் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

திரிஷா :- ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை திரிஷா கில்லி,சாமி போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபலமானார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் சரியான பட வாய்ப்பு அவருக்கு அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் பெங்களூரில் ஒரு ஹோட்டல் தொடங்கியுள்ளார்.

ஷ்ரதா ஸ்ரீநாத்:- இவன் தந்திரன் விக்ரம் வேதா போன்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஷ்ரதா ஸ்ரீநாத். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் பிறகு பிரபலமான. அதன் பிறகு சக்கர, மாற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி இருந்து வந்த இந்த நடிகை தற்போது பட வாய்ப்பு குறைய ஆரம்பித்ததால் தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் சென்னையில்  ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.

ஷில்பா ஷெட்டி:- பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை சில்பா செட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய் நடித்த குஷி படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். இவருக்கு மும்பையில் ராயல் டி கிளப் வைத்து நடத்தி வருகிறார்.

பர்னிதா :- கன்னட நடிகையான இவர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி, சூர்யா நடிப்பில் வெளியான மாசு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு சரியாக வர வாய்ப்பு இல்லாததால் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது அவருடன் சேர்ந்து ஒரு தொழிலை செய்து வருகிறார்.

சிம்ரன்:- திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்து நடிகை சிம்ரன் 20 வருடத்திற்கு பிறகு சினிமாவிற்கு ராக்கெட்ரி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகை சிம்ரன் சினிமாவில் மார்க்கெட்டை இழந்த பிறகு சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.