நடிகர் கமல் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பின்பு கதாநாயகனாக தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு பார்த்தால் இவரது நடிப்பில் வெளியாகும் பல படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படங்களில் ஒன்றுதான் மாவீரன் இந்த திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் எப்பொழுதே ரசிகர்களுக்கு அறிவித்த நிலையில் இந்தப் படத்தின் கதாநாயகி யார் மற்றும் இசையமைப்பாளர் யார் என ரசிகர்களிடம் பெரிய கேள்வி இருந்தது என்றே கூறலாம்.ஆனால் அதற்கு தற்பொழுது படக்குழுவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தான் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த தகவலை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் ஒரே கொண்டாட்டத்தில் குதித்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

kamal

அதுமட்டுமல்லாமல் சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க இருக்கும் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என ரசிகர்கள் தற்பொழுதே  தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பு இந்த திரைப்படத்திலும் அற்புதமாக இருக்கும் என்பது மட்டும் எங்களுக்கு உறுதியாக தெரியும் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version