லியோ திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகையா.? அட இவங்களா..

0
vijay
vijay

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்வதற்கு நிறைய திரைப்படங்களில் பணியாற்றி எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்தவர் தான் நடிகர் விஜய்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகை த்ரிஷா அவர்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் புதிதாக பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம் அந்த நடிகை யார் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் நடித்த நடிகை ஷாந்தி மாயாதேவி தான் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

lokesh
lokesh

மேலும் இவர் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இவர் நடித்து விட்டால் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து விடுவார் என்றும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.