பிரபல நடிகையிடம் 70 வருடம் கால்ஷீட் கேட்ட இயக்குனர்.! அதிர்ச்சியான நடிகை.! பின்பு நடந்தது என்ன.?

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் நம் நினைவுக்கு வருவது, தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு தற்போது சிறிது ஓய்வில் இருந்து வருகிறார்.

சரண்யாவின் கணவர்தான் பொன்வண்ணன், இவர் சரண்யாவின் விஷயத்தில் தலையிட மாட்டார், இதை சரண்யாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார், பொன்வண்ணன் அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பாராம் அதேபோல் தனது இரு குழந்தைகள் மீதும் அதிக பாசம் வைத்திருப்பார் என கூறினார் சரண்யா.

சரண்யாவின் மகள்கள் இருவரும் மருத்துவ துறையில் பயின்று வருகிறார்கள், சரண்யா மற்றும் பொன்வண்ணன் சினிமாத்துறையில் தங்களது பணியை செய்துவந்தார்கள், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சரண்யா தன்னுடைய கணவர் பொன்வண்ணன் திருமணத்திற்கு முன்பு எப்படி தன்னிடம் காதலை புரபோஸ் செய்தார் என்பதை கூறியுள்ளார்.

saranya ponvannan
saranya ponvannan

அவர் கூறியதாவது பொன்வண்ணன் அவர்கள் தன்னிடம் போன் செய்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போகிறேன் அந்த திரைப்படத்துக்கு உங்களுடைய கால்ஷீட் வேண்டும் எனக் கேட்டாராம், அதற்கு சரண்யா எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் என கேட்டுள்ளார் அப்பொழுது பொன்வண்ணன் 70 வருடம் கால்சீட் வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சரண்யா அதிர்ச்சி அடைந்துள்ளார், அதன் பின்புதான் சரண்யாவுக்கு தெரிந்ததாம் அவர் தனது காதலை வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்துள்ளார் என்று, இப்பொழுது சரண்யா மற்றும் பொன்வண்ணன் தனது குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Leave a Comment