கதாநாயகனாக சூது கவ்வும் இரண்டாம் பாகத்தில் களம் இறங்கும் பிரபல நடிகர்.? விஜய் சேதுபதி எந்த ரோலில் நடிக்கிறார் தெரியுமா.?

மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தற்போது கையில் வைத்துக் கொண்டு வருபவர் தான் விஜய் சேதுபதி இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடத்து பின்பு கதாநாயகனாக உருவம் எடுத்தார்.

அவ்வாறு பார்த்தால் இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.அதை தொடர்ந்து பார்த்தால் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருப்பார். மேலும் இவரது நடிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் சூது கவ்வும்.

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா,அசோக் செல்வன்,ரமேஷ் திலக் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள் பெரிதளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறதாம் அதாவது சூது கவ்வும் இரண்டாம் பாகத்தில் நடிகர் சிவா தான் ஹீரோவாக நடித்து வருவதாகவும் சத்யராஜ்,கருணாகரன்,ரமேஷ் திலக்,ராதாரவி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் இதில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் சேதுபதி வந்து நடித்துக் கொடுக்கப் போகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

soothu kavvum2
soothu kavvum2

இந்த இரண்டாம் பாகத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த இரண்டாம் பாகத்தை எடுத்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது மட்டும் தெரிகிறது அதில் வரும் அனைத்து காட்சிகளும் பார்ப்பதற்கு மிக காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment