நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை படத்தில் நடித்தார் இந்த படம் பல்வேறு தடைகளை தகர்த்தெரிந்து ஒருவழியாக பிப்ரவரி 24 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது.
படம் எதிர்பார்த்த அளவு இல்லை அதனால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன இருப்பினும் இந்த வருடத்தில் இன்னொரு படத்தை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த அஜித் முடிவெடுத்துள்ளார்.
அந்த வகையில் அஜித்தின் 61 வது திரைப்படத்தை ஹச். வினோத் தனது ஸ்டைலில் எடுக்கிறார். இந்த படத்தை பெரும் 75 நாட்களில் எடுக்க வேண்டும் என அஜித் கட்டளையிட்டு உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக எடுக்கப்படுகிறது இந்த படத்தில் அஜித்தை தவிர வேறு எந்த நடிகர் நடிகை நடிக்கிறார் என்பது இதுவரை அறிவிக்காமல் இருக்கிறது.
இருப்பினும் பல நடிகர், நடிகைகளின் பெயர்கள் இடம்பெறுகின்றன அந்தவகையில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியரும் வில்லனாக john kokken என்பவரும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமில்லாமல் ஒரு சில இளம் நடிகர்களுக்கும் இந்தப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்கும் என அவர்களின் பெயர்களும் இடம் பெறுகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தெலுங்கில் வில்லனாகவும் நடித்து அசத்தும் நடிகர் ஆதி அண்மையில் அஜித்தை சந்தித்து உள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது நடிகர் ஆதி தனது திருமணம் அழைப்பிற்கு அஜித்தை கூப்பிட அதற்காக நேரில் சென்று உள்ளதாக ஒரு சில தகவல்கள் பேசப்படுகிறது அண்மையில் அஜித் ஆதி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.
