பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை வெற்றிகரமாக முடித்த பிரபல நடிகர்.! இணையத்தில் வைரலாகும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இதோ.!

0
vikram
vikram

தமிழ்திரை உலகில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் பல இயக்குனர்களும் முயற்சி செய்து கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது திறமையால் மிக விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

என்னதான் இவர் மிகவும் விறுவிறுப்பாக இயக்கி வந்தாலும் இந்த படத்தில் அடிக்கடி பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ஒரு உயிர் பலி ஏற்பட்டு மணிரத்னம் மீது வழக்கு தொடர்ந்தது என ஒரு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிக வேகமாக வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என நடிகர் ஜெயம்ரவி சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார் ஜெயம் ரவியை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடிக்கும் பகுதியை பிரபல நடிகர் முடித்துள்ளார்.ஆம் யார் அந்த பிரபல நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகர் ரகுமான் அவர்கள் தான் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடிக்கும் பகுதியை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இவர் பகிர்ந்ததில் படப்பிடிப்பு தல புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் இறுதியாக தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு கை கொடுத்து விட்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது வெளியாகும் இந்த திரைப்படத்தை நாங்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.